பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்றைய தினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினத்தினைப் போன்று இன்றும் பிரான்ஸில் கடுமையான பனிப்பொழிவு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அத்துடன், இன்றைய தினமும் 29 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக Météo France அறிவித்துள்ளது.
இல்-து-பிரான்சுக்குள் 11 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் எனவும், பாரிஸிற்குள் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரண்டாவது தடவையாக N118 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சின் வீதிகளில் வேகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், முந்திச்செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக Hauts-de-France இன் ஐந்து மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேற்றைய தினம் போன்று இன்றும் லண்டன் மற்றும் பெல்ஜியத்தின் ப்ரூஸ்லெஸ் நகர் நோக்கி செல்லும் புகையிரத சேவைகள் தாமதமாகலாம் எனவும் SNCF அறிவித்துள்ளது.