ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர்களில் பார்த்த சிறுவர்கள் ஒரு சிலர் தீடீரென்று வளர்ந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விடுகின்றனர்.
அந்த வகையில் “ஜி பூம் பா” சிறுவர்கள் தொடரில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிவருபவர் நடிகை ஹன்ஷிகா.
நடிகை ஹன்சிகா தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். ஒரு காலகட்டத்தில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது.
ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் தற்போது அமையவில்லை அதற்கு காரணம் தனது கொழுக்கு மொழுக்கான மேனிதான் என நினைத்து உடல் எடையை குறைத்தார்.
அப்போதும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க வில்லை.
இதனால் அவர் உடல் எடையை இன்னும் குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிபோய் விட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
இதேவேளை, தீவிர உடற்பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.உடற்பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.