காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம்; மிகவும் தூய்மையான, எதையும் நிகழ்த்திக் காட்டக்கூடிய விஷயம். வாழ்வின் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் மக்களாய் பிறந்த அனைவருக்குள்ளும் இந்த காதல் கட்டாயம் ஏற்படும். காதல் ஏற்படுவது யாரும் தீர்மானித்து நிகழ்வது அல்ல; அது தானாய் நிகழும். எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரின் மனதில் காதல் உணர்வு ஏற்படலாம்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில் ஜனவரியில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் கொடிகட்டி பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்த பதிப்பில் படித்து அறியலாம் வாருங்கள்!
நகைச்சுவை உணர்வு
ஜனவரியில் பிறந்த மக்கள் நகைச்சுவை புரிவதில் வல்லவர்களாக இருப்பர்; அவர்கள் இருக்கும் இடமும், அவரைச் சுற்றியுள்ள மனிதர்களும் சிரிப்பும் கூத்துமாய் எல்லா சமயங்களிலும் உற்சாகமாய் இருப்பர். இந்த குணாதிசயத்தைக் கொண்டு இந்த மக்களால், காதல் வாழ்வில் ஏற்படும் சோதனையையும், சாதனையாய் மாற்றி விட முடியும்.
நாள் முடிவடையாது..
இந்த நபர்களின் கேலியும், கிண்டலும் இல்லாமல், இவர்களின் அருகாமை இல்லாமல் ஒரு நாள் கூட இனிதே நிறைவடையாதது போன்ற உணர்வு ஏற்படும். இந்த மக்களை காதலிக்கும் நபர்கள், அவர்களுடன் காதலால் பிணைக்கப்பட்டு இருப்பர்; அதனால் அவர்களின் காதல் வாழ்விற்கு தோல்வி என்பதே கிடையாது
வாழ்க்கையே கொண்டாட்டம்
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் மனதால் குழந்தை போன்றவர்கள்; இவர்களின் மனதில் எந்த கள்ளங்கபடமும் இருக்காது. வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் இரசித்து கொண்டாடி வாழ்வர். வாழ்க்கையில் சிறந்த மற்றும் நிலையான முடிவுகளை எடுப்பவர்கள்; ஆதலால் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் பிரச்சனை என்பதே ஏற்படாது.
காதல் மன்னர்கள்
காதலில் பின்னி பெடலெடுக்கும் காதல் நிபுணர்கள் இவர்கள்; இந்த மக்களை ரொமாண்ஸில் ஜெயிப்பது கடினம். இந்த அற்புத குணாதிசயங்கள் அவர்களின் காதல் வாழ்வை மேலும் மேலும் மேம்படுத்திட உதவும்.
மாடர்ன் மக்கள்
இவர்கள் மாடர்னானவர்கள் மற்றும் அமைதியான மனநிலை கொண்டவர்கள். ஆனால், இவர்களை அடக்கி ஆள முயன்றால் அவ்வளவு தான் எரிமலையாக வெடித்து விடுவர். காதலோ அல்லது வேறு விஷயமோ இவர்களுக்கு அடங்கி வாழுதல் என்பது முற்றிலும் பிடிக்காத விஷயம். தனது காதலால் மற்றும் கனிவான குணத்தால் எல்லோரையும் கவர்ந்து விடுவர்; முக்கியமாக காதலிக்கும் நபர்களை, தனது காதல் கடலில் மூழ்கச் செய்யுமளவுக்கு கவிழ்த்து விடுவர்