Loading...
பண்டாரவளை நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு இடையே பதற்றத்தை தோற்றுவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை நேற்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Loading...
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற குறித்த இசை நிகழ்ச்சி, காவல்துறையின் உத்தரவுக்கு அமைய இடைநடுவே நிறுத்தியதால் கோபமடைந்த ரசிகர்கள் மேடை மீது காற்களை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
பதற்றத்தை கட்டுப்படுத்த சென்ற காவல்துறை அதிகாரிகளுடன் அவர்கள் முறுகலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.
Loading...