Loading...
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரட்டுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர் பன்னல பகுதியை சேர்ந்த 41 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
சந்தேக நபரின் பயணப்பையில் இருந்து 174 சிகரட் பொதிகள், சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள சிகரட் தொகையின் பெறுமதி சுமார் 20 லட்சம் ரூபாய் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...