Loading...
குருநாகல் – அலவ்வ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல் துறை ஊடப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கெப் வாகனம், வேன், மற்றும் உந்துருளி ஆகியன மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்கள் அநுராதபுரம் பகுதியில் வசிப்பவர்கள் என விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.
Loading...
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கெப் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...