கிட்னியை காரணம் காட்டி திருமணம் நின்றுபோன சம்பவம் சென்னையில் அறங்கேறியுள்ளது.
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா (32) என்ற பெண் நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் நான் ஆலந்தூரில் குடும்பத்துடன் வசித்துவருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ் (29) என்பவர் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு வாட்ஸ் அப் மூலம் நண்பராக பழகினோம். பின்பு நாளைடைவில் விக்னேஷ் என்னை காதலிப்பதாக கூறினார்.
இருப்பினும் நான் அவரை விட 3 வயது அதிகமான பெண் என்பதால், வேண்டாம் என்று மறுத்தேன். தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், காதலை ஏற்றுக் கொண்டேன்.
காதலிக்கும் போது விக்னேஷிடம் எனக்கு பிறவியிலேயே வலது பக்கம் கிட்னி மட்டும் இருப்பதாகவும், இது எனக்கே 4 வருடத்திற்கு முன்பு தான் தெரியும் என்று தெரிவித்திருந்தேன்.
அதற்கு அவர் நானும் கால்கள் தாங்கி தான் நடப்பேன் எனக் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கான தாம்பூலம் மாற்றி கொண்டனர்.
இதனால் இருவரும் நெருக்கமாக பழகினோம். விக்னேஷ் இப்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு எனது தந்தை காலமானார். அதன் பிறகு எங்கள் வழக்கப்படி பெண் வீட்டார் தான் திருமண செலவுகளை ஏற்க வேண்டும் என்றும் அத்தோடு 20 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் விக்னேஷ் தரப்பினர் கேட்டனர்.
இதனால் விக்னேஷ் தரப்புக்கும் எங்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தற்போது என்னை இரண்டு கிட்னியோடு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் மற்றும் அவரது வீட்டார் தெரிவித்து விட்டனர்,.
நான் நிச்சயிக்கப்பட்ட பிறகு காதலித்த விக்னேஷ் தான் கணவன் என்று உறவினர்களுக்கு எல்லோருக்கும் தெரியும்.
தற்போது கிட்னியை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறிப்பிட்டு இருந்தார்.