Loading...
சவுதி அரேபியாவில் பாரவூர்தி செலுத்துனராக பணியாற்றிய நிலையில் மரணமடைந்த தனது கணவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருமாறு கோரி தும்மலசூரிய – வெலிபென்னகஹமுல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் 23 வருடங்கள் பணியாற்றிவந்த 52 வயதான குறித்த பெண்ணின் கணவர் கடந்த 17 ஆம் திகதி விபத்தொன்றில் மரணமடைந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
Loading...
தனது கணவரின் தேகத்தை இலங்கைக்கு கொண்டுவந்து தமக்கு தருவிகிக்குமாறு கோரியபோதும், வெளிநாட்டு வேளைவாய்ப்பு பணியகம் அது தொடர்பில் இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
Loading...