கடந்த 18 மாதங்களில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 ஆயிரத்து 130 கிராம் கேரளா கஞ்சா தொகை காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை கடற்கரை ஊடாக கடத்த முயற்சிக்கப்பட்ட 110 கிலோகிராம் நிறைக்கொண்ட கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மூவரையும் கடற்படையினரும் காவற்துறையினரும் கைது செய்துள்ளனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வல்வெட்டித்துறைப் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.