Loading...
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க குடியுரிமைப் பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டார். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோத்தாபய ராஜபக்சவின் இந்தக் கருத்தை ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரியொருவர் மறுத்துள்ளாரென கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்ச ஆதரவு தருவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...