மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இன்று இளைஞர்கள் இருவர் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்த இளைஞர் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த தனுஷ் (சியபத் பினான்ஷ) என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மோட்டார் சைக்கிள் கல்லடிப் பாலத்தின் அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதே நேரம் அவரைக் காப்பாற்ற இன்னுமொரு இளைஞர்ரும் பாலத்திற்குள் பாய்ந்ததாக கூறப்படுகிற போதும் அதனை உறுதிப்படுத்த முடியாது உள்ளது.
குறித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் கடும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கல்லடிப்பாலத்தில் பாய்ந்ததாக கூறப்படும் இளைஞர் அனைவருடனும் அன்புடனும் பண்பாகவும் பழகும் நபர் எனவும் அவர் ஒரு சமூக சேவையாளர் பல சமூக சேவை அமைப்புக்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து சிறப்பாகவும் துடிப்புடன் சமூக சேவையில் ஈடுபடுபவர்.
இவரின் இந்த முடிவு அனைவரையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லடி பாலத்தில் அவருடைய மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இளைஞர்கள் பலர் சம்பவ இடத்தில் குவிந்துள்ளதுடன் தேடுதல் நடடிவக்கைகளில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.