தனது கள்ளக்காதல் பற்றி கணவரிடம் கூறிவிட்டதால் கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் என பிரியங்கா காந்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இலுப்பநத்தத்தில் தாயே குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, கொள்ளை கும்பல் தன் நகைகளை பறித்ததோடு, தன்னையும், தன் 5 வயது மகள் ஷிவாணியையும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர் என பிரியங்கா காந்தி என்கிற பெண் நாடகமாடிய சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாரணையில் சிக்கிய பிரியங்கா காந்தி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் “சேலம் கொண்டப்பா நாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ்(25) என்பவரோடு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. எனவே, அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தோம். கடந்த 24ம் தேதி மகளுடன் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்று அவருடன் 3 மணி நேரம் இருந்தேன்.
அப்போது என் கணவர் சிங்கப்பூரில் இருந்து போன் செய்தார். அவரிடம் பேசிய என் மகள் நாங்கள் வெங்கடேஷ் வீட்டில் இருப்பதை கூறிவிட்டாள். எங்களின் கள்ளக்காதல் விவகாரத்தையும் கூறிவிட்டாள்.
விரைவில் என் கணவர் ஊருக்கு வர இருப்பதால் அவரிடம் எல்லாவற்றையும் கூறிவிடுவாள் என நான் பயந்தேன். எனவே, இரவு கிணற்றில் தள்ளி கொலை செய்தேன். இரவு முழுவதும் அங்கே இருந்தேன். அதிகாலை கிணற்றில் இறங்கி ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டேன். அதன் பின் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் என்னை மீட்டனர். கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக நாடகம் ஆடினேன். ஆனால், விசாரணையில் சிக்கிக் கொண்டேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.