மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 03ம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ராசிபலன் உங்களுக்காக!
மேஷம்!
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும்.
வாகனங்களில் செல்லும்போது கவனமும், பேசும் வார்த்தையில் நிதானமும் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். நண்பர்களுடன் பழகும்போது ஜாக்கிரதையாக இருக்கவும், ஏன் எனில் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு.
உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்.
ரிஷபம்!
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். புதிய வீடு வாங்குவது குறித்த யோசனை வரும். போக்குவரத்துக்கு செலவு கூடும்.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். பழைய கடனில் ஒரு பாதி அடைப்படும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மன அமைதி ஏற்படும். வெளியிடங்களில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரம் சீரான வளர்ச்சி காணும்.
மிதுனம்!
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க துவங்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான யோசனை வரும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயலை செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
கடகம்!
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்வீர்கள். வீட்டில் உங்கள் தலைமையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புது வீடு வாங்கும் யோகமும் அமையும்.
பெரியோர்களின் அன்பும் ஆசியும் கிட்டும். குலதெய்வ வழிபடு சிறப்பை தரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிலும் சற்று அதிக முயற்சி எடுத்தால் வெற்றி சேரும். முடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட காரியம் கச்சிதமாக முடியும். மன தைரியம் கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான முயற்சிகள் நல்லவிதமாக முடியும்.
சிம்மம்!
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். குடும்ப பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய வீடு வாங்குவது கட்டுவது தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வாங்கிய கடன் கொடுப்பதுடன் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும்.
தெய்வ பக்தி அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி!
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் ஒற்றுமை நிலையாக இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். உடன் பிறந்தோருடன் பேசும்போது எச்சரிக்கை தேவை.
உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது திட்டம் நிறைவேறும்.
துலாம்!
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். பழைய கடன்கள் ஓரளவு அடைப்படும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு இருந்த சிரமம் குறையும். திருமண முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். உறவினர் மத்தியில் அந்தஸ்து, கௌரவம் உயரும்.
பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். நண்பர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். எதிலும் சாதகமான சூழல் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
விருச்சிகம்!
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பகைவரை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் இருக்கும். விலகிப்போன சொந்தங்கள் தேடி வருவர். கணவன் மணவிடையே அன்யோன்யம் ஏற்படும். எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். மனவருத்தம் நீங்கும். எதிர்பாராத வகையில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான விஷயங்கள் கிடைக்கும்.
தனுசு!
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாகும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற காரியங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம், கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் சுமூகமாக முடியும். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். உறவினர்களால் தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம்.
கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். குடும்பத்தினர் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும். உத்யோகத்தில் வீண் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் சுமாராகவே இருக்கும்.
மகரம்!
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்ய வேண்டிவரும். குடும்பத்தில் அனைவரிடமும் அன்பாக பேசி பழகுவது நல்லது. உடல் நலம் சீராகும். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் செலவுகள் அனைத்தும் உங்கள் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் இருந்த சோதனைகள் விலகும்.
சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். சிறிய முதலீட்டில் புதிய தொழில் ஒன்றை தொடங்க முடியும்.
கும்பம்!
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மன சஞ்சலம் மாறி மன நிம்மதி ஏற்பட வாய்ப்புண்டு. பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். வனத்தில் மித வேகம் பின்பற்றவும்.
பணவரவு எதிர்பாராத வேகத்தில் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். நண்பர்கள், உறவினர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். உத்யோகத்தில் எல்லோரையும் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்..
மீனம்!
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும். சுபச்செலவு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மை உண்டாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையிடாமல் பார்த்துக்கொள்ளவும். பண வரவு நன்றாக இருக்கும். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. கடன்களை அடைத்துவிடவும் வாய்ப்புண்டு.
நண்பர்கள் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். கணவன் மனைவிடையே அடிக்கடி ஈகோ பிரச்சனை வந்து போகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை நீங்கும்