வெங்காயம் என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாகும். குறிப்பாக இந்தியாவில் வெங்காயம் என்பது அடிப்படை உணவுப்பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் வெங்காயம் இன்றி சமைக்கப்படும் உணவுகள் என்பது மிக மிக குறைவுதான். வெங்காயத்திற்கென்று ஒரு தனிச்சுவை உள்ளது. வெங்காயம் உணவில் சேர்க்கப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதில் நிரம்பியுள்ள எண்ணற்ற சத்துக்களும்தான்.
சர்க்கரை நோய், ஆஸ்துமா, சரும மற்றும் முடி ஆரோக்கியம் மட்டுமின்றி சிலவகை புற்றுநோய்களை கூட வெங்காயம் தடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் தினமும் வெங்காயம் சாப்பிடுவது என்பது ஆரோக்கியமானதல்ல என்று சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதாலோ அல்லது தினமும் சாப்பிடுவதாலோ ஏற்படும் தீமைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
அலர்ஜிகள்
உங்களுக்கு வெங்காயத்தால் ஒவ்வாமை ஏற்படுமெனில் உங்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மென்மையான சருமம் உள்ளவர்கள் அதிகம் வெங்காயம் சாப்பிட்டால் அவர்கள் சருமத்தில் அதிக பாதிப்புகள் ஏற்படும். வெங்காயத்தால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்று கூறப்பட்டாலும் அதனால் சரும பாதிப்புகள், ஈறுகளில் வீக்கம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குடல் வாயு
தேசிய சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி நமது வயிறால் அதிகளவு சர்க்கரையை ஜீரணம் செய்ய இயலாது. இந்த சர்க்கரை உடைக்கப்படுவதற்கு முன்னரே குடலுக்குள் நுழைநவதால் இதிலுள்ள பாக்டீரியாக்கள் வாயுவை உண்டாக்குகிறது. வெங்காயத்தில் இயற்கையாகவே ப்ரெக்டொஸ் என்னும் பொருள் உள்ளது இது சிலருக்கு வாயுப்பிரச்சினைகளை உண்டாக்கும். இந்த வாயுக்கோளாரால் அடிவயிற்றில் வலி, துர்நாற்றம் போன்ற பிரச்சினைகள் எழலாம். மேலும் உங்களுக்கு உணவு சகிப்புத்தன்மை குறைவாக இருந்தால் வெங்காயம் தினமும் சாப்பிடுவது உங்களுக்கு பல செரிமான கோளாறுகளை உண்டாக்கும்.
நெஞ்செரிச்சல்
நெஞ்செரிச்சல் என்பது வயிற்றில் உள்ள அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே வரும்போது நமக்கு மார்பு பகுதியில் எறிவது போன்ற உணர்வு ஏற்படுவதாகும். மருத்துவ அறிக்கைகளின் படி நெஞ்செரிச்சல் உணவு இல்லாதவர்கள் கூட வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும்போது நெஞ்செரிச்சலை உணர்வார்கள் என்று கூறுகிறது. அதிலும் வாயுப்பிரச்சினை உள்ளவர்கள் சாப்பிடும்போது அது ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் மிகவும் மோசமானதாக இருக்கும். ஆய்வறிக்கையின் படி ஐந்தில் ஒருவர் வாரத்திற்கு ஒருமுறையாவது கடுமையான நெஞ்செரிச்சலை உணர்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும் அதிகளவு வெங்காயம்தான்.
மருந்துகளுடன் குறுக்கீடு
மற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்வதில் பிற காய்கறிகளை விட வெங்காயம் முன்னணியில் உள்ளது. பச்சை வெங்காயத்தில் அதிகளவு வைட்டமின் கே உள்ளது. இது சராசரியாக பெண்கள் ஒருநாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அளவை விட மிக அதிகமாகும். அதேபோல ஆண்களுக்கும் ஒரு கப் வெங்காயத்திலேயே அன்றைய நாளுக்கு தேவையான வைட்டமின் கே கிடைத்துவிடும். அதற்கு மேல சாப்பிடும் வெங்காயம் அனைத்துமே ஆண், பெண் இருவருக்குமே பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். அதிகளவு வைட்டமின் கே கவ்மேடின் போன்ற மருந்துகளுடன் வினைபுரிந்து பக்கவிளைவுகளை உண்டாகும். குறிப்பாக இரத்தம் தொடர்பான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் அதிக வெங்காயம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
அடிவயிறு வீக்கம்
வெங்காயம் அதிகளவு ப்ரெக்டொஸ் நிறைந்ததாக இருப்பதால் இது நமது உடலில் பல்வேறு விதமான பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கிமான ஒன்றுதான் அடிவயிற்று வீக்கம். சொல்லப்போனால் நீங்கள் தொடர்ந்து ஒரு மாதம் தினமும் வெங்காயம் சாப்பிட்டால் உங்கள் அடிவயிறு பெரிய அளவில் வீங்கிவிடும். பின்னர் அதற்காக நீங்கள் நீண்ட காலம் வருத்தப்பட நேரிடும்.
குறைந்த இரத்த அழுத்தம்
வெங்காயத்தை குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச்சிறந்த வழியாகும் ஏனெனில் இதில் சரியான அளவு பொட்டாசியம் உள்ளது. அதுவே அளவு மாறும்போது அதனால் ஏற்படும் விளைவுகளும் மாறுபடும். இரத்த அழுத்தம் அதிகமாக குறைவது உங்கள் உடலில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மயக்கம், மங்கலான பார்வை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதய கோளாறுகள்
முன்பே கூறியது போல அதிகளவு வெங்காயம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை மிகவும் குறைக்கும், இரத்த அழுத்தமும், நமது இதய ஆரோக்கியமும் ஒன்றோடொன்று நேரடி தொடர்புடையவை. இரத்த அழுத்தம் குறையும்போது அது நேரடியாக உங்கள் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாய் துர்நாற்றம்
வெங்காயம் அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கியமான பக்கவிளைவுகளில் ஒன்று வாய் துர்நாற்றம் ஆகும். வலுவான வெங்காயத்தின் வாசனையானது நீண்ட நேரத்திற்கு உங்கள் வாயை விட்டு போகாது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் முன் அதிகளவு வெங்காயம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.