இளம்பெண் ஒருவர் தனிமையின் விரக்தியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் பெற்றோர் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் தனிமையில் தத்தளிக்கிறார்கள். தனிமை ஒரு மனிதனை நல்ல வழியிலும் சிந்திக்க வைக்கும், கெட்ட வழியிலும் சிந்திக்க வைக்கும். நாம் தனிமையை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த டமானி என்ற 19 வயது இளம்பெண் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தார். இவரது பெற்றோர் இருவரும் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் டமானி என்றும் தனிமையிலே இருந்து வந்துள்ளார். வாழ்க்கையையும் தனிமையையும் வெறுத்த அவர், தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்க்கை நடத்த பணம் கண்டிப்பாக முக்கியம் தான். ஆனாலும் குழந்தைகளின் சந்தோஷமும் முக்கியம் தான். ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் சிறிது நேரமாவது செலவழிக்க வேண்டும். டமானியின் பெற்றோர் இதை செய்ய தவறியதால், இன்று அவர்களது மகளை இழந்து தவித்து வருகின்றனர்.