தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனையில் இணங்கக்கூடிய விடயங்கள் எதுவும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யோசனையை எப்படியாவது தோல்வியடைய செய்ய வேண்டும் எனவும் இதனை தோல்வியடைய செய்யவில்லை என்றால் நாட்டிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கருத்திலேயே தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களை ஈடு வைத்துவிட்டு நாட்டை நடத்திச் செல்வதற்கு இடமளிக்க கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வியத்மக அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.