Loading...
யாழ்.பருத்தித்துறை காணியொன்றிலிருந்து 68 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இன்பசிட்டி கடற்கரை பகுதியிலுள்ள காணி ஒன்றில் இருந்து இன்று 68 கிலோ கிராம் கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
Loading...
பருத்தித்துறை கடற்படையினர் வழங்கிய தகவலிற்கமைவாக காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உடுகமசூரியவின் உத்தரவுக்கமைய பருத்தித்துறை பொலிஸார் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த காணியின் உரிமையாளரையும் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...