சசிகலா மீதான அந்நியச் செலாவணி மோசடி தொடர்பான வழக்கில், அரச தரப்பு சாட்சிகளிடம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காணொளிக்காட்சி மூலம் நேற்று (திங்கட்கிழமை) எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதவான் மலர்மதி முன்னிலையில் சசிகலா முன்னிலையானார்.
இதன்போது மொத்தம் 4 வழக்குகளில் சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சசிகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரச சாட்சிகளை விசாரணை செய்யுமாறு சசிகலா கோரியதையடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அரச சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துமாறு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து மின்னணுக்கருவிகளை கொள்வனவு செய்தமை தொடர்பாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமுலாக்கத்துறை அந்நியச்செலாவணி மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.