கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் சமையல் கலைஞராக பணியாற்றும் 45 வயதான நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஏமாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் 2 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது. அவர் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டலின் உரிமையாளர் என குறிப்பிட்டு 20 வயதான பல்கலைக்கழக மாணவியை ஏமாற்றி அவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹட்டன் பிரதேச பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனது கணவர் பேஸ்புக் ஊடாக இந்த மாணவியுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு, சம்பாதிக்கும் பணத்தை இந்த மாணவிக்கு செலவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு தான் வாழ வழியில்லாமல் இருப்பதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மாணவியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது குறித்த நபர், கொழும்பில் உள்ள பல ஹோட்டல்களுக்கு தான் உரிமையாளர் என குறிப்பிட்டதாகவும், தன்மை பல முறை சந்தித்துள்ளதாகவும், சந்திக்க வரும் போது விலை அதிகமான ஆடைகளை அணிந்து வந்துள்ளதாகவும், தனக்கு பல முறை பணம் வழங்கியுள்ளதாகவும் குறித்த மாணவி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் சமையல் கலைஞன் என தனக்கு தெரியாதென மாணவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தொடர்பை நிறுத்தி கொள்ளுமாறு பொலிஸார் மாணவியை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.