இந்து மதத்தின் வேதங்களையும், பண்டைய நூல்களையும் நன்கு படித்து பார்த்தால் இந்த உலகத்தை பற்றியும், நம் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை பற்றியும் நன்றாக தெரிந்து கொள்ளலாம்.
சொல்லப்போனால் அவை தற்கால இன்டர்நெட்டை விட அதிகளவு தகவல்களை கொண்டதாக இருக்கும்.
எதிர்காலம் என்று வரும்போது நம் நினைவுக்கு முதலில் வருவது ஜோதிட சாஸ்திரம்தான். ஜோதிடம் மட்டுமின்றி நம் எதிர்காலத்தை பற்றி அறிய உதவும் பல நூல்கள் நம் முன்னோர்களால் இயற்றப்பட்டுள்ளது.
எதிர்காலத்தை அறிய நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டதில் முக்கியமான ஒன்று சாமுத்ரிகா இலட்சணமாகும். அதன்படி நம் உடலில் உள்ள பாகங்களின் அளவுகள் மற்றும் குறியீடுகளை வைத்து நமது எதிர்காலத்தை எளிதில் கணக்கிடலாம்.
அந்த வகையில் ஆண்களின் வாழ்க்கையில் சரி பாதியான பெண்களின் உடலில் உள்ள குறியீடுகள் அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் ஆணின் எதிர்காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சாமுத்ரிகா இலட்சணம் கூறுகிறது.
திருமணம் தீர்மானம் என்பது ஆண்,பெண் இருவரின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துவதாகும்.
பெண்களின் உடலில் அவர்களின் பாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. ஏனெனில் அதில் உள்ள குறியீடுகள் அவர்கள் கணவரின் விதியையே மாற்றக்கூடும் சக்தி உடையவை.
மனிதனின் கைகள்
மனிதனின் கைகளும், கால்களும் ஐந்து உறுப்பினர்களை கொண்டுள்ளது, அவை முறையே அங்குஸ்தா, டார்ஜனி, மத்யமா. அனாமிகா மற்றும் கனிஷ்திகா ஆகும். இவை முறையே கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரை நமது விரல்களில் ள்ள சக்திகள் என்று வேதங்கள் கூறுகிறது. பெண்ணின் பாதம் அவள் கணவரின் வாழ்க்கையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்
பெண்ணின் உள்ளங்கால்
ஒரு பெண்ணின் உள்ளங்காலில் சக்ரா, துவாஜா அல்லது ஸ்வஸ்திக் போன்ற குறியீடுகள் இருப்பது மிகவும் அதிர்ஷ்டமாகும். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆண் வாழ்வில் அனைத்து வசதிகளையும் பெற்று மன்னன் போல வாழ்வான், தன் மனைவியையும் ராணியாக நடத்துவான்.
கால் விரல்கள்
பெண்ணின் இரண்டாவது கால் விரலானது மற்ற விரல்களை விட பெரியதாக உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் மிகவும் துர்பாக்கியசாலிகள் என்றே கூறவேண்டும். திருமணத்திற்கு முன்பான அவர்களது வாழ்க்கை ஆண்களின் அமைதியையும், குடும்பத்தின் நிம்மதியையும் திருமணதிற்கு பின் கெடுத்துவிடும். இந்த பெண்கள் காமத்தில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பொதுவாக இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வது குடும்பத்திற்கு ஏற்றதல்ல என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
மலைகள்
பெண்ணின் பாதத்தில் சுண்டு விரலுக்கு கீழே இருந்து பெரு விரலுக்கு ஒரு கோடு செல்வது போல் இருந்தால் அந்த பெண் மிகவும் புனிதத்துவம் வாய்ந்தவளாக இருப்பாள். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆணின் வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் குவிந்திருக்கும்.
குறியீடுகள்
பெண்னின் பாதத்தில் கமலா மற்றும் சத்ராவின் அறிகுறிகள் இருந்தால் அந்த பெண்ணின் கணவர் மகிழ்ச்சி, செல்வம், புகழ் என அனைத்தும் பெற்றவராக இருப்பார், ஆனால் அது அவர்கள் இருவரும் ஒன்றாக வாழும்வரை மட்டும்தான். ஒருவேளை அவர்கள் பிரிந்து விட்டால் அவரின் அதிர்ஷ்டம் அனைத்தும் போய்விடும்.
தரையுடன் தொடர்பு
பெண்கள் நடக்கும் போது அவர்களின் அனாமிகா மற்றும் கனிஷ்திகா தரை மீது படாவிட்டால் அவர்கள் இளம் வயதிலேயே விதவையாக வாய்ப்புள்ளது. மேலும் அவர்கள் நம்பத்தகுதியற்ற பெண்களாகவும் இருப்பார்கள் என்று சாமுத்ரிகா இலட்சணம் கூறுகிறது.
விரல்களுக்கிடையேயான இடைவெளி
பெண்ணின் கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையே இடைவெளி குறைவாக இருந்தால் அவர்கள் வாழ்க்கை சண்டை, சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கும். அதுவே இடைவெளி அதிகமாக இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் காதல் இறுதிவரை நிலைத்திருக்கும்.