மனித உடலில் உருவாக கூடிய புற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகமானது. பல வித நோய்கள் மனித உடலில் உண்டாகினாலும், ஏனோ புற்றுநோய் சற்று அபாயம் நிறைந்ததாக உள்ளது. புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆண்டு தோறும் பல ஆயிரம் மக்கள் உயிரை பறிகொடுக்கின்றனர். புற்றுநோய் ஒவ்வொரு வயதினருக்கும் வேறுபாடுடன் வர கூடும்.
குழந்தைகளுக்கு ஒரு விதமாகவும், இளம் வயதினருக்கு ஒரு விதமாகவும், வயதானவர்களுக்கு வேறு விதமாகவும் உருவாகும். பலவகையான புற்றுநோய்கள் இருந்தாலும் தற்போது பலராலும் பேசப்பட்டு வர கூடிய பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியும் அதனால் ஏற்பட கூடிய பாதிப்பும் மோசமானதாம்.
காரணம், இதன் அறிகுறி ஆரம்ப நிலையில் தென்படாது. உயிரை முழுவதுமாக உறிஞ்சிய பின்னரே இந்த வகை புற்றுநோய் செல்கள் நம் உடலில் குடியுள்ளது என்பதே தெரியுமாம். ஆனால், இதனை ஒரு பழத்தின் தோலையும் விதையையும் வைத்தே நம்மால் தடுக்க இயலுமாம். அது என்ன பழம் என்பதையும், எவ்வாறு இது சாத்தியம் ஆகும் என்பதையும் இப்பதிவில் பார்ப்போம்.
பெருங்குடல் பாதிப்பு
நீங்கள் நினைப்பது போன்று பெருங்குடலில் உருவாக கூடிய இந்த வகை புற்றுநோய்கள் அவ்வளவு நல்லதல்ல. இவை குடல் பகுதியில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்த கூடிய ஆற்றல் வாய்ந்ததாம். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் நம் உடலில் தென்படாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறிகுறிகள்
- பெருங்கடலில் புற்றுநோய் செல்கள் உருவானதற்கு சில அறிகுறிகள் உள்ளன.
- மலச்சிக்கல் ஏற்படுதல்
- மலத்தில் இரத்தம் வடிதல்
- அடிவயிற்றில் அடிக்கடி வலி உண்டாகுதல்
- பசியின்மை
- உடல் எடை தீடீரென குறைதல்
- கருமையான நிறத்தில் மலம் கழித்தல்
ஆராய்ச்சியின் தீர்வு..!
பலவித ஆய்வுகள் இந்த பெருங்குடல் புற்றுநோயை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருங்குடலில் புற்றுநோய் செல்களின் பாதிப்பு இல்லாமல் இருக்க திராட்சை உதவுகிறதாம். அதுவும் அதன் விதை மற்றும் தோலில் தான் இதற்கான முழு பலனும் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
காரணம் என்ன..?
மற்ற பழங்களை காட்டிலும் திராட்சையில் இவ்வளவு மகத்துவம் நிறைந்துள்ளதற்கு இதில் உள்ள proanthocyanidins மற்றும் resveratrol என்கிற மூல பொருட்கள் காரணமாம். இவை புற்றுநோய் செல்களை அழிக்க கூடிய தன்மையை இயற்கையாக கொண்டுள்ளதாம்.
தினமும் திராட்சையா..?
நாம் ஒரு சில உணவுகளை அன்றாடம் சேர்த்து உண்ண வேண்டும். அவற்றில் திராட்சையும் அடங்கும். திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் பல வித பயன்கள் உடலுக்கு கிடைக்கும். அவற்றில் ஒன்று தான் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தில் இருந்து உங்களை காப்பது.
கொலஸ்ட்ரால்
திராட்சையின் தோல் மற்றும் அதன் விதையில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் உள்ளதாம். இதன் விதையை துப்பாமல் அப்படியே முழுசாக சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலெஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம்.
இரத்த அழுத்தம்
திராட்சையை சாப்பிட்டு வருவதன் மூலம் அபரிமிதமாக அதிகரித்துள்ள இரத்த அழுத்தத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். இத்துடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறையும். எனவே, தினமும் ஒரு கைப்பிடி திராட்சையை சாப்பிட்டு வாருங்கள்.
வேறென்ன உணவுகள்.?
இதே போன்று மேலும் சில நம் வீட்டில் உள்ள உணவுகள் பெருங்குடல் புற்றுநோயிற்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டுள்ளது. அவற்றில் சில…
நார்சத்து அதிகம் உள்ள முழு தானியங்கள், கிட்னி பீன்ஸ், பருப்பு வகைகள், சிவப்பு அரிசி ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். மேலும், பச்சை காய்கனிகள், பால் பொருட்கள், ஆகியவற்றையும் சேர்த்து உண்ணவும்.
தவிர்க்க வேண்டியவை…
பொதுவாக புற்றுநோய் ஏற்படுத்த கூடிய சில முக்கிய உணவுகளை நாம் தொட்டு கூட பார்க்க கூடாது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக காபி, அதிக இறைச்சி, செயற்கை நிறமூட்டிகள் அதிகம் கலந்த உணவுகள் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.