கூலிப்படையை ஏவி கணவரைக் கொலை செய்த வழக்கில் கைதான பெண் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தானே மாவட்டம் சகாப்பூர் தாலுகா சிவசேனா துணை தலைவராக இருந்தவர் சைலேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி கணேஷ்புரி கிராம பகுதியில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
பொலிசார் நடத்திய விசாரணையில், சைலேஷ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை அவரது மனைவி சாக்சி கண்டுப்பிடித்த நிலையில் ஆத்திரத்தில் கூலிப்படையினரை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் சாக்சி மற்றும் கூலிப்படையினர் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிறையில் கழிவறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை.
பின்னர் சிறை ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சாக்சி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
உடனடியாக சாக்சி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் கணவரை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் இருந்ததால் சாக்சி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.