வவுனியாவில் இன்று காலை நகரசபை ஊழியர்கள் குப்பை கொட்டுவதற்கு சாளம்பைக்குளம் பகுதியிலுள்ள மக்கள் அங்கு செல்வதற்கு தடை விதித்திருந்ததுடன் நகரசபை ஊழியர்களைத்தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நகரபை ஊழியர்கள் காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வந்து தமது வாகனங்களை தரித்துவிட்டு குப்பை கொட்டுவதற்கு இட வசதி ஏற்படுத்தித்தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிவந்துள்ள நிலையில் காலை 10.30மணியளவில் போராட்டம் உக்கிரமடைந்து பிரதான ஏ 9 கண்டி வீதியை வழிமறித்து போராட்டத்தினை வீதியிலிருந்து மேற்கொண்டனர்.
இதையடுத்து நகரசபை தவிசாளர், நகரசபை உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் ஆகியோர் பிற்பகல் 2 மணியளவில் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு சாளம்பைக்குள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தமது செயற்பாடுகள் முடக்கமடைந்துள்ளதாக இதற்கு தீர்வு பெற்றுதருமாறு முறையிட்டனர். இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் நாளை அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நகரசபை ஊழியர்கள் வீதியைமறித்து மேற்கொள்ளும் போராட்டத்தினைக்கைவிடுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து இன்று பிற்பகல் 3.30மணியளவில் கண்டி வீதி வழிமறிப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும் ஊழியர்களிடம் சென்ற நகசபை தலைவர் மற்றும் பிரதேச சபை தலைவர் ஆகியோர் இன்றைய போராட்டத்தினை முடிவிற்குக்கொண்டு வருவதாகவும் பொலிசார் நீதிமன்ற அனுமதியுடன் நாளையிலிருந்து வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளதாகத் தெரிவித்ததையடுத்து வீதியை வழிமறித்து வைக்கப்பட்ட போராட்டம் மேற்கொண்ட ஊழியர்கள் தமது வாகனத்தை மாவட்ட செயலகத்தின் அருகே நிறுத்தி வைத்துள்ளனர்.
போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தற்போது பிரதான ஏ9வீதி மக்களின் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று மாலை 5மணியளவில் மாவட்ட செலயகத்தில் பொலிசார், நகரசபை, அரசாங்க அதிபர் கலந்துகொள்ளும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.