காணாமல் போயிருந்த பெண்ணொருவரின் சடலம் மகாவலி கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக நவலபிட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.
நாவலபிட்டி – பலங்தொட்ட பகுதியை சேர்ந்த 84 வயதான நான்கு பிள்ளைகளின் தாயின் சடலமே மாகாவலி கங்கையில் மிதந்தவாறு இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்துள்ள பெண் சில தினங்களுக்கு முன்னர் தமது தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறிக்க சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்ததாக அந்த பெண்ணின் பிள்ளைகள் நாவலபிட்டி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நீரை பெற்றுக்கொள்வதற்காக மகாவலி கங்கைக்கு அருகில் சென்றிருந்த வேளை அவர் நீரில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.