தன்னுடைய படங்களை ஆபாச இணையதளத்தில் சிலர் பதிவிட்டுள்ளனர் என சின்மயி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் புகார் தெரிவித்து தமிழகத்தில் மிகப்பெரும் பரபரப்பை உண்டாக்கினார். சின்மயி சொன்னது எல்லாம் பொய் என்று வைரமுத்து மறுப்பு தெரிவித்தார். சின்மயி இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்த பிறகு பல சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல ஆரம்பித்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சமீபத்தில் பேசிய அவர் மீடூ குறித்து போலீஸில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எந்த நடவடிக்கையும் இன்னமும் எடுக்கப்பட்வில்லை. நாங்கள் நசுக்கப்படுகிறோம். என கூறியிருந்தார்.
என்னை ஆபாசமாக படம்பிடிப்பார்கள்
இந்நிலையில் நபர் ஒருவர் டிவிட்டரில், நீங்கள் திடமான, தைரியமான, அழகான பெண். பல பெண்களுக்கு நீங்கள் ரோல் மாடல். ஆனால் நீங்கள் வெளியே செல்லும்போது புடவை அணிந்து சென்றால் நன்றாக இருக்கும், அது நல்லது என கூறினார். இதற்கு பதிலளித்த அவர் நான் சேலை அணிந்து வந்தால் சிலர் என்னை ஆபாசமாக படம்பிடித்து அதனை ஆபாச வலைதளத்தில் பதிவிடுகிறார்கள். என் போட்டோவை பார்த்து சுய இன்பம் காண்பதாக எனக்கு மெசேஜ் அனுப்புகின்றனர். சேலை அணிந்தாலும் ஜீன்ஸ் அணிந்தாலும் நான் இந்தியன் என சின்மயி அந்த நபருக்கு பதிலளித்துள்ளார்.
When I wear a sari there are groups of men who take photographs of my waist + side of my chest, circle it and upload it on soft porn websites. And then I get messages on how they are masturbating to it.
I can be Indian in a sari and in jeans, Sir. https://t.co/94Ctcsa361
— Chinmayi Sripaada (@Chinmayi) January 28, 2019