மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 700 ரூபா அடிப்படை சம்பளத்திற்கு கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாத்திட்ட தொழிற்சங்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சவப்பெட்டி ஏந்தியவாறு பொகவந்தலாவ நகரில் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தப்பட்டது.
பொகவந்தலாவ கொட்டிளயாகலை தோட்ட மக்கள் இன்று (29) காலை இந்த ஆர்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது பொகவநந்தலாவ, கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் இருந்து உருவபொம்மையை சவப்பெட்டியாக ஏந்தி பேரணியாக பொகவந்தலாவ, செல்வகந்த சந்திவரை சென்று பிரதான நகரபகுதியில் கூட்டு ஒப்பந்தத்தில் சைச்சாதிட்ட பிரதானிகளின் உருபொம்மைகள் எரிக்கபட்டன.
தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்று தருவதாக கூறிய இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் யார் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் பெற்று தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி கட்சி தாவலில் ஈடுபட்டு பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சரான வடிவேல் சுரேஸ் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தோட்ட தொழிலாளர்களையும் கம்பனிகாரர்கள் வழங்கிய பெட்டியை பெற்று கொண்டு தொழிலாளர்களை காட்டி கொடுத்து விட்டதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.