விஷாலுக்கு வில்லனாக துப்பறிவாளன் படத்தில் நடித்தவர் வினய். இது இவர் வில்லனாக நடித்த முதல் படம். உன்னாலே உன்னாலே படம் மூலம் சாக்லேட் பாய் ஹீரோவாக அறிமுகமானவர் தொடர்ந்து ஜெயம் கொண்டான், மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்று புன்னகை, அரண்மனை என படங்களில் நடித்து வந்தார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், அரண்மனை, துப்பறிவாளன் என சில படங்களே அவருக்கு கைகொடுத்தது. பின் ஹீரோக்கான இடம் கிடைக்கவில்லை. இதனால் வில்லனாக மாறியவர் வெங்கடேஷ் இயக்கியுள்ள நேத்ரா படத்திலும் வில்லனாகவே நடித்துள்ளார்.
இவர்கள் தவிர இப்படத்தில் வின்செண்ட் அசோகன், ரித்விகா, ரோபோ சங்கர், இமான் என படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடந்தது.
இவ்விழாவிற்கு வினய்யை இயக்குனர் போனில் அழைத்திருக்கிறார். ஆனால் அவரின் மேனேஜர் இனிமேல் அவர் சினிமாவில் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த இயக்குனர் வேறு வழியில்லாமல் மற்றவர்களை வைத்து விழா நடத்தியுள்ளார். கடந்த 2018 ல் இவர் சினிமா பக்கமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.