அம்பாறைமாவட்டம் பிரபலமான டாக்டர் சிறுமி ஒருவரை கொடூரமாக தாக்கியதில் குறித்த குழந்தை ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த டாக்டர் அவரது சட்டத்தையும், அதிகாரத்தையும், தனது ஆதிக்கத்தில் வைத்திருந்து செயல்பட்டு வந்த சம்பவம் சமூக ஆரவலர் ஒருவரால் சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் தனியார் மருத்துவமனையை நடாத்தி வருபவர் டாக்டர் சித்திரா. இவர் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அதிகாரியாக செயற்பட்டவராவார்.
இவர் சட்ட விரோதமாக இரு சிறுவர்களை பெற்று தானும் தனது தங்கை ராதாவுமாக ஒவ்வொருவரையும் வளர்த்து வந்துள்ளனர். இச்சமயம் சித்திரா வளர்த்த பிள்ளை தாய், தந்தையை கேட்டு அடம்பிடித்ததால் மிக மோசமாக சித்திரைவதைக்கு உட்பட்டு சுயநினைவிழந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருகோணமலை புகையிரத முன்வீதியை சேர்ந்த 36 வயதுடைய சுறோமி என்ற தமிழ் பெண் திருமலையை சேர்ந்த றோகன என்பவரை திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றுள்ளனர்.
இவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி தாயார் சுறோமியையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் அம்பாறை அக்கரைப்பற்றுக்கு புருசனுக்கு தெரியாமல் வரவழைத்திருக்கிறார் சித்திரா. இரண்டுபிள்ளைகளில் மூத்த பிள்ளை உசானியை தனக்கும், அடுத்த 3வயது பிள்ளையை தனது தங்கை ராதாவிடமும் கொடுத்துள்ளார்.
இந்த சூழ்ச்சியை செய்த சித்திரா தாயாரான சுறோமியை மத்திய கிழக்கு நாடொன்றுக்கு இரண்டு மாதத்திற்கு முன் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. 8வயதான உசானியை வீட்டு வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்தி வந்தபோது அச்சிறுமி தாய் தந்தையை கேட்டு ஆழ மிருகத்தனமாக டாக்டர் சித்திரா சித்திரவதை செய்ய குழந்தை சுயநினைவை இழந்து விட்டது.
உடனே தங்கையான ராதாவை அழைத்து அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலைக்கு சிறுமியை கொண்டு சேர்த்த போது இக்குழந்தை தாய் தகப்பனற்ற அனாதை என்றே அனுமதித்துள்ளனர்.
வைத்திய சாலை வட்டாரங்கள் பொலிசுக்கு தெரிவித்தபோது பொலிசையும், தான் வேலை செய்த வைத்திய சாலை பணியாளர்களையும் சித்திரா அச்சுறுத்தி பேசியதாகவும் தெரிய வருகிறது. நிலைமையை அறிந்த நல்ல உள்ளங்கள் சில இச்சம்பவத்தை நீதி மன்ற கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். நீதி கிடைக்கும்வரை பகிருங்கள். நாளை உங்கள் உறவுகளுக்கும் இதுமாதிரி ஓர் சம்பவம் நடக்கலாம். என குறித்த சமூக ஆர்வலர் குறிபிட்டுள்ளார்.