ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன தன்னால் கோத்தபாய ராஜபக்சவை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் நினைவுத்தூபிக்காக 34 மில்லியன் ரூபாய் அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு கோத்தபாய ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துரைத்த டட்லி சிறிசேன இதுகுறித்து கூறுகையில்;
அது வெறுமனே 35 மில்லியன் ரூபாய்கள். இந்நிலையில் அந்தப்பணத்தை தாமே செலுத்தி கோத்தபாயவை, வழக்கில் இருந்து காப்பாற்ற நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்காக அவர் செய்த சேவைகளை கருத்திற்கொண்டே இந்த கருத்தை தாம் கூறுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.