அந்தரங்க உறுப்பில் ஹெராயின் வைத்து உறவு கொண்டதால் காதலி இறப்பதற்கு காரணமான மருத்துவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. சாக்சனி-அன்ஹால்ட்டில் உள்ள ஹால்பெர்ஸ்டாட் நகரில் Plastic, Aesthetic மற்றும் Hand Surgery க்கான அமியோஸ் கிளினிக்கில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் 43 வயதான Niederbichler.
இவர் ஆன்லைன் மூலம் Yvonne (வயது 38) என்ற பெண்ணை சந்தித்து காதலிக்க ஆரம்பித்த பின்பு இருவரும் பல நேரங்களில் நெருக்கமாக இருந்துள்ளனர்.
மருத்துவர் மீது இருந்த அதீத காதலால், Yvonne தன்னுடைய கணவரை விட்டு பிரிய முடிவெடுத்துள்ளார்.
இதற்கிடையில் ஒரு நாள் Niederbichler தன்னுடைய அந்தரங்க உறுப்பில் தடை செய்யப்பட்ட ஹெராயினை வைத்து Yvonne உடன் உறவு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் குறித்த பெண் பாதிப்படைந்து திடீரென துடிக்க ஆரம்பித்துள்ளார்.
இதனையடுத்து அஞ்சிய மருத்துவர் மருத்துவமனைக்கு எடுத்து சென்று, சிகிச்சை உட்படுத்திய போதும் அதற்குள் Yvonne பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 2015 முதல் 2018ம் ஆண்டிற்குள் இதேபோன்று வேறு மூன்று பெண்களுடன் மருத்துவர் நெருக்கம் காட்டியிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.