மும்பையில் காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன் மனைவியின் அலுவலகத்திற்கே சென்று அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் காதல் திருமணங்கள் நடைபெறுகிறது. திருமணத்திற்கு முன்பு எதெல்லாம் தனது ஜோடியிடம் பிடித்ததோ அது திருமணத்திற்கு பின்பு பிடிப்பதில்லை. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதில்லை. இதனாலேயே விவாகரத்து பெற கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த குமார் என்பவர் வீனா என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் உயிருக்கு உயிராக நேசித்து அவரையே கரம் பிடித்தார். இருவரும் வெவ்வேறு அலுவலகங்களில் வேலை செய்து வந்தனர். குமாருக்கு வீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதியினருக்குள் அவ்வபோது சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வீனா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் கடும் கோபமடைந்த குமார், வீனாவின் அலுவலகத்திற்கே சென்று அவருடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதல் மனைவி வீனாவை சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பொலிஸார் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.