இந்த குளிர்காலம் வந்துட்டாலே போதும் ஏகப்பட்ட சரும பிரச்சினைகளும் நம்மை தொற்றிக் கொள்ளும். அதில் ஒன்று தான் வாயை சுற்றி புண்கள் ஏற்படுவது. இது பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பதோடு மிகுந்த வலியையும் ஏற்படுத்தும். எனவே இந்த குளிர்கால புண்களை உடனே விரட்டுவது நல்லது. அதற்கு சில எளிய இயற்கை முறைகளை இங்கே கூற உள்ளோம். வாங்க பார்க்கலாம்.
குளிர்கால வாய்ப்புண்
இந்த குளிர்கால புண்கள் காய்ச்சல் கொப்புளங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு சிறிய வடிவில் தண்ணீர் கொப்புளங்கள் போன்று உதட்டை சுற்றி காணப்படும். இது வெடித்தவுடன் அதன் மேல் ஒரு தோல் உருவாகிறது.
இந்த வாய்ப்புண் பரவக் கூடியது. ஒருத்தரிடமிருந்து ஒருத்தருக்கு முத்தம் கொடுப்பதாலோ எச்சில் வழியாகவோ பரவக் கூடியது. இதை எச்எஸ்வி1, எச்எஸ்வி2 என்ற வைரஸ்கள் உருவாக்குகின்றன. வாய்வழி செக்ஸில் ஈடுபடுபவருக்கு இது எளிதாக பரவுகிறது. இந்த புண்களை சில இயற்கை வழிகளைக் கொண்டு நான்கே வாரத்தில் குணப்படுத்தி விடலாம்.
ஐஸ் கட்டிகள்
பயன்படுத்தும் முறை
ஐஸ் கட்டியைக் கொண்டு புண்களின் மீது லேசாக ஒத்தடம் கொடுக்கவும். இது வீக்கத்தையும் அரிப்பையும் போக்கும். ஐஸ் கட்டியை அதன் மேல் தேய்க்க வேண்டாம். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வாருங்கள். இது புண்களில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை போக்கி சீக்கிரம் குணமாக்கி விடுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
- காட்டன் பஞ்சு
பயன்படுத்தும் முறை
ஒரு காட்டன் பஞ்சில் தேங்காய் எண்ணெய்யை நனைத்து புண்களில் தடவுங்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என பல தடவை செய்து வாருங்கள்.
தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி மைக்ரோபியல் ஏஜெண்ட் இருக்கிறது. இதில் ட்ரைகிளிசரைடு, லாரிக் அமிலம் மற்றும் ஓலியிக் அமிலம் போன்றவை வைரஸ்களை அழித்து வாய்ப்புண்களை குணமாக்குகிறது