இளம் வயதிலே நரை முடியா..? இதை பார்க்கும் போதெல்லாம் வேதனையாக உள்ளதா..? என்ன செய்தாலும் இந்த வெள்ளை முடிகளை விரட்டவே முடியலையா..? உங்களின் எல்லா பதிலுக்கும் “இல்லை” என்று கூறினால் உங்களுக்கான தீர்வை ஒரே இலையை வைத்து அடைந்து விடலாம்.
இளம் வயதிலே இன்று பலருக்கும் வெள்ளை முடி உருவாகிறது. வெள்ளை முடிகளை தற்காலிகமாக கருமையாக்க “டை” போன்ற பலவித வேதி பொருட்களை நாம் பயன்படுத்துவோம். இவை நமது முடியை குறைந்த காலத்திற்கு மட்டும் வெள்ளையாக காட்டி விட்டு, அதன் பின்னர் மீண்டும் வெள்ளையாகவே மாற்றி விடும்.
வெள்ளை முழுக்களை நிரந்தரமாக கருமையாக்க ஒரு எளிய வழி தான் கொய்யா இலை. இதை பயன்படுத்தி ஒரே மாதத்திற்குள் தலை முடியை கருமையாக மாற்றி விடலாம். எப்படி இது சாத்தியம் ஆகும் என்பதையும், இதனை எந்த பொருளோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம்.
மருத்தவ இலை
இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு இலைகளுக்கும் ஒரு மருத்துவ தன்மை உள்ளது. அந்த வகையில் கொய்யா இலைக்கும் பலவித மருத்துவ குணங்கள் உண்டு. சித்த மருத்துவத்தில் இதனை மருந்தாகவும் உட்கொண்டு வருவார்கள். புற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை இது யவரிற்கும் தீர்வை தர கூடியது.
என்ன காரணம்..?
ஒரு இலையில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளதென்றால், அந்த இலையில் பலவித சத்துக்கள் உள்ளது என்று அர்த்தம். கொய்யா இலையில் வைட்டமின் சி, நீர்சத்து, நார்சத்து, ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் போன்ற பல தாதுக்கள் நிரம்பி உள்ளதாம். இது தான் கொய்யாவின் முழு சத்திற்கும் காரணம்.
முடி கொட்டுவதை நிறுத்த
முடி கொட்டும் பிரச்சினையை நிறுத்தி வழுக்கை ஏற்படாமல் தடுக்க, இந்த குறிப்பு போதும்..!
தேவையானவை
- ஒரு கைப்பிடி கொய்யா இலை
- 1 லிட்டர் தண்ணீர்
செய்முறை
முதலில் 1 லிட்டர் நீரில் கொய்யா இலையை போடவும். 30 நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை ஆறவிட்டு தலையில் தடவி கொள்ளவும். இதே போன்று வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்.
வெள்ளை முடிக்கு தீர்வு
வெள்ளை முடி இளம் வயதிலே உங்களை ஆட்டி படைக்கிறதா..? உங்களுக்கான தீர்வை தரும் குறிப்பு இதோ..
தேவையான பொருட்கள்..
- கொய்யா இலை 5
- கறிவேப்பில்லை இலை 20
- நெல்லி 1
- தேங்காய் எண்ணெய் 200 மி.லி
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய்யை வாணலில் ஊற்றி அதில் கருவேப்பிலை, கொய்யா இலை, நறுக்கிய நெல்லிக்காய் முதலியவற்றை சேர்க்கவும். மிதமான சூட்டில் இவை முழுவதுமாக வறுபடும் வரை வதக்கி கொண்டு, அடுப்பை அணைத்து விடவும்.
இந்த கலவை குளிர்ந்த பிறகு இதனை வடிகட்டி வாரத்திற்கு 1 முறை இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும்
பொடுகு
முடியின் பிரச்சினைகளை தீர்க்க முதலில் பொடுகை ஒழிக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்..
- கொய்யா இலை 1 கைப்பிடி
- ஆலிவ் எண்ணெய் 3 ஸ்பூன்
செய்முறை
கொய்யா இலையை சிறிது சிறிதாக நறுக்கி கொண்டு அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவவும். 30 நிமிடத்திற்கு பின்னர் சிறிதளவு சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் பொடுகு நீங்கி, முடி உதிர்வும் நின்று விடும்.