இன்றிரவும், நாளையும் நாட்டிலும் (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையும்) சூழவுள்ள கடற்பரப்புகளிலும் (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரையும்) காற்றின் வேகமானது அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக் கூடும். வட மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும்.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது