Loading...
நெல் அறுவடையின் போது பாம்பு தீண்டிய நிலையில் குடும்பப் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்த மந்துவில் வடக்கை சேர்ந்த 57 வயதுடைய குடும்பப் பெண்யே புடையன் பாம்புக் கடிக்குள்ளாகியுள்ளார்.
Loading...
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாம்பு தீண்டிய பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் பாம்புக்கடிக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...