முதல் முறையாக பாகிஸ்தானில் இந்து பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கம்பார் ஷாதத்காட் பகுதியை சேர்ந்தவர் சுமன் ஹைதராபத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றார்.
பின்னர் கராச்சியின் சபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம் பெற்றார்.
இதுகுறித்து சுமன் குமாரியின் தந்தை பவன் குமார் போதான் தெரிவித்ததாவது,
‘கம்பார் ஷாதத்காட் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்க சுமன் விரும்புவார்.
தற்போது முக்கிய மற்றும் பொறுப்புள்ள பதவி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர் நேர்மை மற்றும் கடின உழைப்பினால் முன்னேறுவார் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்து சமூகத்தில் ஏற்கெனவே ராணா பகவான்தாஸ் என்பவர் 2005-2007 கால கட்டத்தில் நீதிபதியாக இருந்தார்.
இவரே பாகிஸ்தானில் இந்து சமூகத்தின் முதல் நீதிபதி பொறுப்பு வகித்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது முதல் முறையாக ஒரு இந்துப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.