அவுஸ்திரேலியாவில் டஸ்மேனியாவின் தெற்கு வனப்பகுதிகளில், காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.
இதனால், 12 அவசரகால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் பல்வேறு நாடுகளை குளிர் காலநிலை காணப்படும் அதேசமயம் மத்திய கோட்டிற்கு கீழே அமைந்துள்ள நாடுகளை வெப்பம் கடுமையாக தாக்கி வருகின்றது.
இந்த வகையில், கடும் வெப்பத்தை எதிர்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியாவின் பல இடங்களில், காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
தீவு மாகாணமான டஸ்மேனியாவின், ஹூவான் வனப்பகுதியில், பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காட்டுத்தீ வேகமாக, பற்றிப் பரவி வருகிறது. பல நூறு ஏக்கர்களை பாதித்திருப்பதாக கூறப்படுகின்றது.
காற்றின் வேகத்தால் மற்ற பகுதிகளுக்கும் காட்டு தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, ஹூவான் வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெற்கு டஸ்மேனியாவின் க்ளென் ஹூவானில் உள்ள Frypan மற்றும் பெர்முடா வீதிகளில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக டஸ்மேனியா தீயணைப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.