உலக அளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 89வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலை watchdog Transparency International என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு 180 நாடுகளை கணக்கில் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் முதல் முன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு 81வது இடத்திலிருந்த இந்தியா மூன்று இடங்கள் முன்னேறி 78வது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை அதே இடத்தை தக்கவைத்துள்ளது.
ஜி ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரன தொடர் நடவடிக்கை காரணமாக சீனா கடந்த ஆண்டைவிட 10 இடங்கள் பின்தங்கி 87வது இடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் 117, பங்களாதேஷ் 149, நேபாளம் 124 வது இடங்களை பிடித்து, குறைந்தளவு ஊழல் உள்ள நாடுகளாகியுள்ளன. வியட்நாமுக்கு இதில் 117வது இடம் கிடைத்துள்ளது. வடகொரியாவுக்கு 176வது இடமும், ரஷ்யாவுக்கு 138வது இடமும் கிடைத்துள்ளது.
ஊழல் குறைந்த நாடுகள் பட்டியல்
ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு முதல் இருபது இடங்களுக்குள் இருந்த அமெரிக்கா 22வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதில் ஜப்பான் 18வது இடமும், அவுஸ்திரேலியா 12வது இடமும் பிடித்துள்ளன.
எந்த நாடுகளில் ஊழல் இல்லாத நாடும் என்று குறிப்பிட முடியாத அளவு ஊழல் எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த 180 நாடுகளில் தொடர்ந்து 20 நாடுகள் ஊழலுக்கு எதிராக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அதே நேரத்தில் 16 நாடுகள் தொடர்ந்து ஊழலை நோக்கி முன்னேறி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளில் ஊழல் சார்ந்தோ, ஊழல் ஒழிப்பு சார்ந்தோ எந்த மாற்றமும் இல்லாமலும் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
ஊழல் காரணமாக ஜனநாயகம் முற்றிலுமாகப் பாதிக்கப்படுவதாகவும் ஊழல் நிறைந்த நபர்கள் அரசியல் போன்றவற்றில் ஈடுபடுவது பல நாடுகளில் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து watchdog Transparency International தலைமை அதிகாரி டெலியா கூறும்போது, “ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தை ஊழல் பலவீனமாக்குகின்றது. இதனை ஜனநாயகமற்ற ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருவதை நாங்கள் பல நாடுகளில் கண்டு வருகிறோம்“ என்றார்.