அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என தகவல் கிடைத்தள்ளது.
குயின்ஸ்லேன்ட்டின் டூவூம்பா பகுதியில் தபால் சேவை பணிகளில் ஈடுபட்ட வந்த 29 வயதுடைய இலங்கை இளைஞரே நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.
பிரதாபன் லோகநாதன் என்ற குறித்த இளைஞன் 2012ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு வருகைத்தந்துள்ளார். தாம் தபால் சேவையில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற குற்ற செயல்கள் தொடர்பில் அவர் இந்த நிலைக்குள்ளாகியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான டொலர்கள் பெறுமதியான கடிதங்களையும் பொதிகளையும் திருடிய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட பொதிகள் மற்றும் கடிதங்கள், சோதனைகளின் போது அவரின் கார் மற்றும் தங்குமிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டன.
குறித்த இலங்கை இளைஞர் தமது மாமா முறை உறவினர் ஒருவரிடம் பெற்ற 95 ஆயிரம் அவுஸ்திரேலிய டொலர்களை திருப்பி செலுத்துவதற்காகவே இந்த திருட்டில் ஈடுபட்டதாக இது தொடர்பான நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ள இந்த இளைஞர் தமது குற்றத்துக்காக 500 அவுஸ்திரேலிய டொலர்களை அபராதமாகவும் 5187 டொலர்களை இழப்பீடாகவும் செலுத்தும் நிலைக்கும் உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
உங்கள் பிரதேச செய்திகளும் எமது இணையதளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள்.