வீரகெடிய பெதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.47 வயதுடைய கொஸ்கஹவத்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்த நபர் மேலுமொரு நபருடன் உந்துருளியில் பயணித்துள்ள நிலையில் , முச்சக்கரவண்டியில் வந்த இருவர் இந்த கொலையினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் உந்துருளியை மோதச் செய்து உந்துருளி கவிழ்ந்தவுடன் குறித்த நபரை கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபருக்கும் மேலும் சிலருக்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற தகராறு இந்த கொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , வீரகெடிய காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.