விஜய் இப்போது சினிமாவில் மிக முக்கியமானவராக இருக்கிறார். அவரின் படங்களுக்காக வியாபார வர்த்தகம் அதிக அளவில் இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் அவர் நடித்த படங்கள் எளிதாக ரூ 200 கோடியை தாண்டிவிடுகிறது.
இன்னொரு புறம் கூடவே சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. பல வருடங்களாக தொடர்ந்து வரும் இப்பிரச்சனை அண்மையில் வந்த படங்கள் அதிகமாகவே படர்ந்தது என சொல்லலாம்.
இதனால் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதே வேளையில் படத்தின் பாடல்கள் தற்போதைய அரசியல் ஆட்சியை விமர்சிப்பது போல இருந்தது. அதுவும் ஹிட்டாகிவிட்டது.
அதே போல மதுர படத்தின் போது மச்சான் பேரு மதுர பாட்டுக்கு நான் கை அசைச்சா எனக்கு கடல் போல கூட்டம் வரும் என பாடலாசிரியர் கபிலன் எழுதினாராம்.
இதில் எனக்கு கடல் போல கூட்ட வரும் என்ற வரியை குறிப்பிட்டு அண்ணா, ஓவரா இருக்கு, கொஞ்சம் குறைச்சுகோங்க, எம்.ஜி.ஆர், சிவாஜி இருக்காங்க, பாத்துக்கோங்க என இயக்குனர் மாதேசிடம் சொன்னாராம்.
பின்னர் அதற்கு பதிலாக “கட்டி வெல்லம் உன்ன பார்த்தா கட்டெறும்பு கூட வருமே” என மாற்றினார்களாம். அவர் அன்று வேண்டாம் என சொன்னது இன்று உண்மையாகிவிட்டது என கூறியுள்ளார் பாடலாசிரியர். இவர் விஜய்க்கு பல பாடல்கள் எழுதியுள்ளாராம்.