சுவிற்சர்லாந்தில் கடந்த காலங்களில் பல மாநிலங் noகளில் வாடகைக்கு மண்டபம் எடுத்து கொண்டாட்டங்கள் செய்வது வழமையாக காணப்பட்டது.
எனினும் இவ்வாறு கொண்டாட்டங்களுக்காக மண்டபங்களை வாடகைக்கு எடுப்பவர்கள் சரியான வகையில் அதனை கையளிக்க தவறுவதால் மண்டப உரிமையார்கள் இலங்கை தமிழர்களின் நிகழ்வுகளுக்காக மண்டபம் கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
சூரிச், வேர்ன், வாசல், லுட்சர்ன், செங்காலன், துர்கவ், ஜெனீவா, லவ்சார் மற்றும் இன்னும் பல பிற மாநிலங்களும் உள்ள மண்டப உரிமையாளர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
காரணம் என்னவெனில் நிகழ்விற்காக பெற்ப்படும் மண்டபங்கள் சரியான வகையில் மீள கையளிக்கப்படாமையே ஆகும்.
அத்துடன் மண்டபம் பெறுபவர்கள் மது போதையில் மண்டப மேற்பார்வையாளர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதுடம் இந்த தீர்மானம் எடுக்கப்படுவதற்கான ஒரு காரணம் என தெரியவருகிறது.
தற்போது ஒரு சில மண்டபங்களே வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் இவையும் எதிர்காலத்தில் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் திரைப்படங்களை காட்சிப்படுத்துவதற்கு கூட பல மண்டபங்கள் தடை விதித்திருப்பமை குறிப்பிடத்தக்கது.
சில வேளை இப்படி எழுதுவது சுவிற்சர்லாந்தில் உள்ள இலங்கையர்களிற்கு பிடிக்காமல் இருக்கலாம் இது எல்லாம் ஏன் செய்தியாக்க வேண்டும் என என்ற கேள்விகளும் வரலாம் அப்படியான சந்தேகத்தை தவிர்ப்பதற்காக விபரங்களுடன் விரைவில் ஆதாரம் வெளியிடப்படும்
உலகில் பழக்க வழக்கம் மற்றும் கலாச்சாரங்களில் உயர்வாக பார்க்கும் தமிழ் இனம் இன்று இந்த விடயங்களில் மதிப்பும் மரியாதையும் இழந்து வருவது உணர்வுள்ள தமிழனுக்கு மரியாதைக் குறைவாக உள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள் அடுத்த தலைமுறையையும் சரியான பாதையில் இன்றுள்ள பெரியவர்கள் வழிநடத்த தவறியுள்ளனர் என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.