Loading...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை நான் உருவாக்கப்போவதில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தவேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை எனவும் கூறுகின்றார்.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Loading...
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாசமாக்கப்பட்டுள்ளது. வேண்டத்தகாதவர்கள் பலர் இன்று கட்சிக்குள் தலையிட்டு கட்சியை சின்னாபின்னமாகியுள்ளனர். இதனை எம்மால் வேடிக்கை பாரிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
Loading...