Loading...
சுவிற்சர்லாந்துக்கு சென்ற இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக சுவிற்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர் வர்த்தகத்திற்காக அடிக்கடி விமானத்தில் சுவிற்சர்லாந்து செல்லுவது வழக்கமாகும்.
Loading...
இந்நிலையில் கடந்த வாரம் சென்ற போது சூரிச் விமான நிலையத்தில் பல இலட்சம் சுவிற்சர்லாந்து பிராங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவர் சுவிற்சர்லாந்தில் செலுத்திய வரிக்கும் சோதனையிட்ட பணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதால் பணத்தையும் அந்நாட்டு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...