ஐக்கிய தேசியக் கட்சி மாகாணசபைத் தேர்தல் நடத்துவதை காலம் கடத்துகின்றது. அது வெளிப்படையாகவே தெரிகின்றது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப் பின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை மெய்வன்மைப் போட்டி பாடசாலை அதிபர் த.சிறிகமலநாதன் தலைமையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
வடகிழக்கு மக்களைப் பற்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி க்கோ அக்கறையில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.
சிங்கள அரச தலைவரால் நியமிக்கப்படுகின்றவர்கள் எங்களுக்குப் புத்திமதி சொல்லுகின்றனர். அவர்களின் புத்திமதிகளைத் தொகுத்தால் புத்தகம் ஒன்றையே வெளியிடலாம். தமிழர்களின் வாக்குகளால் ஆட்சி
பீடமேறிய அரச தலைவர் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளார். ஆனால் மக்களின் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன. இலங்கையும் இணங்கி ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில் ஒரு வீதம் கூட முன்னே ற்றமில்லை.
நீதி கூட வடகிழக்குக்கு ஒருவாறாகவும் தெற்குக்கு ஒருவாறாகவுமே காணப்படுகின்றது. முன்னாள் நீதியரசர் ஒருவரால் எமது வடகிழக்கு தாயகம் துண்டாடப்பட்டது. இதனைத் தமிழர்கள் மறந்து விடப்போவதில்லை. வரலாற்றில் அவை மறைக்க முடியாதளவுக்கு இடம்பி டித்து விட்டன – –என்றார்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள்,கேடயங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வழங்கி வைத்தார். இறுதியில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்கள்.
20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.