இலங்கையில் பல இடங்களில் பல்வேறு குற்றசம்பவங்கள் தொடர்பில் தண்டனை அனுபவித்தவர்களில் சிறுவர்கள் 608பேர் என பொலிஸ் குற்ற தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் 13பேர் சிறுமிகள் இதில் பல சிறுவர் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டோர், இக்குற்றச்சம்பவங்கள் கொலை, கொள்ளை, தாக்குதல், மற்றும் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டோர். இச்சிறுவர்கள் 11-20வயதுக்குட்பட்டவர்களே காணப்படுகின்றனர்.
கொள்ளைச் சம்பவங்களாக பார்க்கும் போது சைக்கிள், மடிக்கணணிகள், செல்லிட தொலைபேசிகள், வீட்டு செல்ல பிராணிகள் திருடியமை பதிவாகியுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களை புரிந்தவர்களின் பட்டியலில் 43ஆயிரம் பேர் அடங்குகின்றனர். இதில் 1200 பேர் பெண்கள்.
பொலிஸ் குற்ற தகவல் பிரிவானது சிறுவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் முகமாக பொலிஸ் மா அதிபரின் வழிநடத்தலின் பேரில் விசேட திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.