சுங்க திணைக்கள உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்குமாயின் அதன் முழு பொறுப்பினையும் நிதியமைச்சு ஏற்க வேண்டும் என சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைச் செயலாளர் வருண சமீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் செல்வாக்கினை பிரயோகித்து சுயாதீனமாக செயற்படும் நிறுவனங்களின் செயற்பாடுகளின் தாக்கம் செலுத்துவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்க திணைக்கள உத்தியோகத்தவர்கள் 05 நாட்களாக முன்னெடுத்து வருகின்ற பணிப்புறக்கணிப்பு தொடர்பில்வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ. எஸ். எம். சார்ள்ஸை பதவியில் இருந்து முறையற்ற விதத்தில் நீக்கி விட்டு அப்பதவிக்கு ஓய்வுப் பெற்ற கடற்படை அதிகாரியை நியமித்தமையினை கண்டித்தே சுங்க உத்தியேயாகத்தர்கள் 05 நாட்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.