04-02-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 21-ம் நாள். அமாவாசை. இரவு 03.01 முதல். பிறகு திருவோணம் நட்சத்திரம். காலை 06.28 வரை. யோகம்: அமிர்த-சித்த யோகம்.
நல்ல நேரம் 6.00 – 7.30, 3.00 – 4.00
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00.
இராகு காலம் மாலை மணி 7.30 – 9.00.
குளிகை: 1:30 – 3:00.
சூலம்: கிழக்கு.
பொது: அமாவாசை. திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். மஹோதய புண்யகாலம். திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ர தீபம். அமாசோமவார பிரதட்சணம், திருப்பாதிரி புலியூர் ஸ்ரீ பாடலீஸ்வரர் சங்கமுக தீர்த்தவாரி.
பரிகாரம்: தயிர்.
மேஷம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
வியாபாரத்தில்நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
மிதுனம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள்.
வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கியபொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.
கடகம்
பிள்ளைகள் உங்கள்அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.
சிம்மம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொட்டது துலங்கும் நாள்.
கன்னி
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளை களின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப் பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.
துலாம்
பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.
வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப் பால் உயரும் நாள்.
விருச்சிகம்
தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிகஅக்கறைக் காட்டுவார்கள்.
விருந்தினர்களின்வருகையால் வீடு களைக் கட்டும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள் வெற்றிக்கு வித்திடும் நாள்.
தனுசு
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
கும்பம்
வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். திடீர் பயணங்களால் திணறுவீர்கள்.
வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மீனம்
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும்.புகழ், கௌரவம் கூடும் நாள்.