Loading...
ஒன்றாரியோ – மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஏகோர்ன் ப்ளேஸ் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
Loading...
இதன் பின்னர் அவரை உடனடியாக மீட்டு பொலிஸார் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...