மூக்கு குத்துவது, காது குத்துவது போன்றவை உடலில் உள்ள தேவையில்லாத வாயுக்களை வெளியேற்றுவதற்கு தான். பொதுவாக ஆண்களின் உடலில் வலப்புறமும் பெண்கிளன் உடலில் இடப்புறமும் தான் வலுவான பகுதிகள். அதனால் தான் கை ரேகை பார்க்கும்பொழுது கூட, ஆண்களுக்கு வலது உள்ளங்கையிலும் பெண்களுக்கு இடது உள்ளங்கையிலும் பார்க்கிறார்கள். அதேபோல ஞான ரிஷிகள் தியானம் செய்கின்ற பொழுது வலது காலை மடக்கி இடது தொடையின் மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்குக் காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்ய ஆரம்பித்தால் சுவாசம் வலது மூக்கின் வழியாக வெளியேற ஆரம்பிக்கும்
அதேபோல ஞான ரிஷிகள் தியானம் செய்கின்ற பொழுது வலது காலை மடக்கி இடது தொடையின் மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்குக் காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்ய ஆரம்பித்தால் சுவாசம் வலது மூக்கின் வழியாக வெளியேற ஆரம்பிக்கும்.
நம்முடைய மூளையில் ஹைப்போதாளமஸ் என்ற பகுதி ஒன்று இருக்கிறது. நம்முடைய நரம்பு மண்டலங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் சின்ன சின்ன உணர்ச்சிப் பிரவாகங்கள் இருக்கின்றன. இந்த பகுதிகளைச் செயல்படுத்துவதற்கு இந்த ஹைப்போதாலமஸ் துணையாக இருக்கிறது.
நம்முடைய மனித வாழ்க்கை முறைக்கு அதிகமாக இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே இடது கை, கால்களை விடவும் பலமாக உள்ளது.
நெற்றிப்பகுதி பெண்கள் மூக்குத்தி அணிகின்ற பொழுது, நெற்றிப்பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போன்று சின்ன சின்ன நரம்புகள் நாசி துவாரங்களில் இறங்கி, கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும் சிறிய ஜவ்வு போன்று மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
வாயுக்கள் ஆலம் விழுது போல் சிறு நம்புத் தொடர்களைக் கொண்டிருக்கிற இந்த மூக்குப் பகுதியில் ஒரு சிறு துவாரத்தை ஏற்படுத்தி, அந்த துவாரத்திற்குள் தங்க மூக்குத்தி அணிந்து கொண்டால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமின்றி, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன்மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயுவானது அகலும்.
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்குத் தான் மூக்குத்தி அணிவிக்கப்படுகிறது. பருவம் எய்திய பெண்களுக்குக் கபால பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சில விதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டுவருவதற்கு ஏற்படுத்தப்பட்டது தான் இந்த மூக்குத்தி குத்தும் மரபு.
நோய்கள் தீர மூக்கு குத்துவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படக் கூடிய சளித் தொல்லை, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரீகம் வளர்ந்து விட்ட காரணத்தினால் சில பெண்கள் வலதுப்பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனா்ல சரியான சாஸ்திர ரீதியாக இடது பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும்.
குத்துதல் சாஸ்திர முறைப்படி இடது பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். இடது பக்கம் குத்துவதினால் சில மாற்றங்கள் உண்டாகும். உங்களுடைய சிந்தனை ஆற்றலை ஒருமுகப்படுத்தும். மனதை அமைதிப்படுத்தும். தியானம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட உதவுகின்றது. மனத் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்கும் என்று ஞானிகளும் ரிஷிகளும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கத்தின் ஆற்றல் நம்முடைய உடலில் உள்ள வெப்பத்தைக் கிரகித்துக் கொண்டு, நீண்ட நேரம் தங்களுக்குள்ளே வைத்திருக்கக் கூடிய ஆற்றல் தங்கத்திற்கு உண்டு. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் நம்முடைய உடலில் ஏற்படுகின்ற அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதில் இருந்து தடைபட்டுக் கொண்டே போகும்.உணர்ச்சிவசப் படுதல் தடுக்கப்பட்டு உடல் வெப்பம் சமநிலை அடைவதால் நெறி பிறழாமல் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் பெரியோர்கள்.